செவ்வாய், 22 ஜூன், 2010
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மிக பிரம்மாண்டம்
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்க விருக்கும் கோவை கொடிசிய வளாகம் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இது வரை தமிழகத்தில் இது போன்ற ஒரு விழா நடைபெற்றதும் இல்லை . இனி நடை பெரும் என்பது தெரியாது. மிரள வைக்கும் அளவிற்கு மிக பிரம்மாண்டமான அரங்குகள் பண்டைய தமிழரின் வாழ்வியலை பிரதி பலிக்கும் கண்காட்சிகள் என பல சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கண்டிப்பாக வந்து காண வேண்டிய இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது .
வியாழன், 3 ஜூன், 2010
வணிகமயமாகும் கல்வி

வணக்கம் தமிழர்களே!
அண்மைக்காலத்தில் தமிழகம் கல்வியில் சிறந்து வருவது உண்மைதான். அரசு அணைத்து மக்களுக்கும் கல்வி தரவில்லை. எனவே தனியார் துறை பங்களிப்பும் இருந்தால் மட்டுமே அணைத்து மக்களுக்கும் கல்வி முடியும் என்ற நிலையில் அண்மைக்காலத்தில் தனியார் துறையினரும் கல்வி நிறுவனங்களை நடத்த தாரளமாக அனுமதித்தது தவறில்லை. அரசு அனுமதி கொடுக்கும் போதே சில கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு தற்போது அக்கல்வி நிறுவணங்கள் வைத்திருக்கும் அணைவரும் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு பணம் குவித்தவர்களை தற்போது சேவை மனப்பாண்மையோடு குறைந்த அளவு கல்விக்கட்டணத்தை வசுலிக்கச் சொல்வது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனியார் ஆசிரியர் பயிற்சி கல்வியியல் கல்லூரியில் அண்மைக்காலங்களில் ஒரு லட்சம் முதல் ஐம்பதாயிரம் வரை பணம் வசுலித்துக் கொண்டு பயிற்சி தருகிறhர்கள். அங்கு படித்துவிட்டு வரும் ஆசிரியர்கள் மட்டும் நல்லவர்களாக இருக்க முடியாது. அவர்களும் பணம் எப்படி சம்பாதிப்பது என்ற நிலைக்கு கல்வி மாற்றம் பெற்றுள்ளது. அரசு தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதைதான் ஆகிவிட்டது அரசு .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
