இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 அக்டோபர், 2010

காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா விரர்கள்

வணக்கம்

இந்தியத் தலைநகர் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காமன் வெல்த் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு விரர்கள் முந்தைய ஆண்டுகளைவிட மிகச் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திவருகிள்றனர்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

காமன் வெல்த் போட்டி இந்தியாவிற்கு பெருமையைச்சேர்க்குமா? சிறுமையைச்சேர்க்குமா?

வணக்கம்

காமன் வெல்த் போட்டிகளை நடத்தி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க நினைத்து சிறுமையைத் தேடிக்கொண்டு இருக்கிறர்கள் போட்டி ஏற்பாட்டுக்குழுவினர். இநத காமன் விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிட்டதலிருந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்த கொண்டேதானிருக்கின்றது. காமன் வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த திட்டமிட்ட போது அதற்கான நிதி ஒதுக்கியது எஸ்சி எஸ்டி பிசiவினருக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விளையாட்டுக்காக செலவடப்படுவதற்கு எதிர்ப்புத் தோன்றியது. பின்னர் விளையாட்டு மைதானம் வடிவமைப்பதில் ஊழல் புகார் . பின்பு கட்டி முடிக்கப்பட்ட நடை பாலம் இடிந்து விழந்தது. புதிதாக கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தின் மேற் கூறை விழந்தது. இவற்றை எல்லாம் பார்துக் பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள் காமன் வெல்த் போட்டிகளில் கலந்து கொல்லப்போதில்லை என்று குறுப்பிடுகின்றன.

செவ்வாய், 22 ஜூன், 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மிக பிரம்மாண்டம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்க விருக்கும் கோவை கொடிசிய வளாகம் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இது வரை தமிழகத்தில் இது போன்ற ஒரு விழா நடைபெற்றதும் இல்லை . இனி நடை பெரும் என்பது தெரியாது. மிரள வைக்கும் அளவிற்கு மிக பிரம்மாண்டமான அரங்குகள் பண்டைய தமிழரின் வாழ்வியலை பிரதி பலிக்கும் கண்காட்சிகள் என பல சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கண்டிப்பாக வந்து காண வேண்டிய இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது .

வியாழன், 3 ஜூன், 2010

வணிகமயமாகும் கல்வி


வணக்கம் தமிழர்களே!
அண்மைக்காலத்தில் தமிழகம் கல்வியில் சிறந்து வருவது உண்மைதான். அரசு அணைத்து மக்களுக்கும் கல்வி தரவில்லை. எனவே தனியார் துறை பங்களிப்பும் இருந்தால் மட்டுமே அணைத்து மக்களுக்கும் கல்வி முடியும் என்ற நிலையில் அண்மைக்காலத்தில் தனியார் துறையினரும் கல்வி நிறுவனங்களை நடத்த தாரளமாக அனுமதித்தது தவறில்லை. அரசு அனுமதி கொடுக்கும் போதே சில கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு தற்போது அக்கல்வி நிறுவணங்கள் வைத்திருக்கும் அணைவரும் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு பணம் குவித்தவர்களை தற்போது சேவை மனப்பாண்மையோடு குறைந்த அளவு கல்விக்கட்டணத்தை வசுலிக்கச் சொல்வது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனியார் ஆசிரியர் பயிற்சி கல்வியியல் கல்லூரியில் அண்மைக்காலங்களில் ஒரு லட்சம் முதல் ஐம்பதாயிரம் வரை பணம் வசுலித்துக் கொண்டு பயிற்சி தருகிறhர்கள். அங்கு படித்துவிட்டு வரும் ஆசிரியர்கள் மட்டும் நல்லவர்களாக இருக்க முடியாது. அவர்களும் பணம் எப்படி சம்பாதிப்பது என்ற நிலைக்கு கல்வி மாற்றம் பெற்றுள்ளது. அரசு தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதைதான் ஆகிவிட்டது
அரசு .

திங்கள், 24 மே, 2010

அரசுப் போக்குவரத்துறை வருவாயை பெருக்கிக் கொள்வதிலேயே முனைப்புடன் செயல் படுகிறது. அதன் அரசு பணியாளர்களான நடத்துனர்களும் பகல் கொல்லை அடிக்கின்றனர்.


அரசுப் பேருந்தில் பயணம் செய்தால் அங்குதான் இந்த பகல் கொல்லை நிகழ்கிறது.. மக்களுக்காக வேலை செய்ய வந்திருக்கும் பேருந்து நடத்துனர். பேருந்தில் ஏரும் போதே பயணிகளை திட்டுவதும் மரியாதை இல்லாமல் பேசுவதும் சில பயணிகளிடம் சண்டை போடுவதும் வாடிக்ககையாகிவிட்டது. ஏல்லா நடத்துநர்களும் இப்படி அல்ல நூற்றுக்கு எழுவது சதவிகிதம் இப்படித்தான் இருக்கிறார்கள். பேருந்தில் ஏறியதும் சில்லறை வைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவிப்பு செய்வார். பின்னர் பயணச்சீட்டு கொடுக்கும் போது சில்லறை கொடுக்காமல் 10 ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு கேட்டால் அதான் ஏரும்போதே சொன்னல்ல என்று கோபமாக திட்டுவதும் முனங்குவதும் சில நடத்துனர்கள் வாய்க்கு வந்தவாறு தகாதறா வார்த்தைகளால் பேசுவதும் தொடர்கதையாகிவிட்டது. ஒரு சில சமயங்களில் சில்லறை இல்லை என்றால் பேருந்தை நிறுத்தி இடையிலேயே கீழே இறக்கியும் விடுகின்றனர். எல்லோருமே சில்லறையுடன் வரமுடியாது அதை நடத்துனர்கள் புரிந்து கொள்வதில்லை. மேலும் 10 ரூபாய் கொடுத்து 3.50 க்கு பயணச்சீட்டு வாங்கினால் பயணச்சீட்டை மட்டும் கொடுத்துவிட்டு மீதப்பணம்; கொடுக்காமல் எதுவுமே சொல்லாமல் சென்றுவிடுவார்கள். அல்லதுமீதம் 6 ரூபாய் மட்டுமே திரும்ப மீதப்பணமாக கொடுக்கின்றனர். மீதம் உள்ள 50 பைசா கேட்டாலும் அப்ப சில்லறை கொடு என்று கேட்டு திட்டுகிறார்கள். அதற்கு பயந்தே பல மக்கள் அந்த 50 பைசாவை கேட்காமல் செல்கின்றனர். இனிமோல் இந்த 50 பைசா பிரச்சனையை தீர்க்க ஒரே வழி எந்த ஒரு பயணச்சீட்டுக்கும் இனி 2.50 3.50 4.50 5.50 என்ற கட்டணங்களை இனிமேல் 3, 4, 5, 6, 7, என்று வைத்தால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் 50 பைசா அதிகமாக கொடுத்த மனநிலையில் செல்லும் பயணிகளுக்கும், பல போரிடம் 50 பைசா என்றால் அந்த நடத்துனருக்கு அவருடைய ஊதியத்தை விட அதிகமான பணம் கிடைக்கின்றது. இதை அரசு கவனத்தில் கொண்டு இவ்வாறு கட்டணத்தை மாற்றி அமைத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும். பொது மக்கள் மத்தில் வேலை செய்ய வந்திருக்கும் அரசுப் பணியாளர்கள் சிலர் பொறுமையாக மென்மையாக முறையில் மக்களிடம் நடந்து கொள்வது எப்படி என்ற சிறப்பு வகுப்புக்களை இன்றுள்ள பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு கற்றுக் கொடுக்க அரசு போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்யலாம்.. தற்போது கோவையில் புதிதாக இயக்கப்பட்ட பல சொகுசுப் பேருந்துகளில் உள்ள தானியங்கி கதவுகளை எந்த ஓட்டுநரும் பயணத்தின் போது திறந்து மூடுவதில்லை. ஒரு சொகுசுப் பேருந்தில் கொச்சைக் கயிறு கொண்டு கதவை கட்டி வைத்திருக்கின்றனர். பேருந்துகளை சுத்தமாக வைத்திருப்பதில்லை. மேலும் பேருந்தை பராமாரிக்க அதிகமாக வேலையாட்களை அரசுப்போக்குவரத்துத்துறை நியமிக்கலாம். அரசுப் போக்குவரத்துறை சேவை என்பதை மறந்து வருவாயை பெருக்கிக் கொள்வதிலேயே முனைப்புடன் செயல் படுகிறது. அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு நடந்தே போய்விடலாம் எனத் தோன்றுகிறது. வைத்தால் குடுமி இல்லை மொட்டை என்ற கதையாக அரசுப் பேருந்துகள் சாலையில் ஓடுவதற்கு தகுதியற்ற பல பேருந்துகள் உள்ளன. மேலும் குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் போவதற்குக் கூட சொகுசுப் பேருந்து என்று அதிக கட்டணம் வலிக்கப்படுகிறது. ஆனால் மிக நெடுந்தொலைவு செல்லும் பேருந்துகள் சாதாரண பேருந்துகள் அதை செகுசுப் பேருந்தாக மாற்றினாலாவது பயன் உண்டு மக்கள் பயணக்கலைப்பு தொரியாமலாவது தொலைவான ஊர்களுக்கு செல்வார்கள். அதை விடுத்து இப்படி பணம் அதிகமாக வசுலிக்க வேண்டும் என்பதே அரசுப் போக்குவரத்துறையின் நோக்கமாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை இல்லாமல் வருவாயை பெருக்குதிலேயே அரசுப் போக்குவரத்துத்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

புதன், 12 மே, 2010

ஒழிக்கப்பட்ட லாட்டரி மீண்டும் தமிழகத்திற்கு வந்தால் கேடு

முன்னால் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரால் ௨00௨ ஆண்டு லாட்டரிக்கு தமிழாக அளவில் தடை விதித்து சட்டம் கொண்டுவந்தார் . இத்தடைசட்டத்தை தற்போது நீக்க வேண்டும் என லாட்டரி விற்பவர்கள் சங்கத்தினர் கருனாநிதி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். அண்மையில் பாராளுமன்றத்தில் லாட்டரி மீதான தடையை நீக்கியது. இதனால் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள திமுக தமிழகத்திலும் லாட்டரி மீதான தடையை நீக்கும் என எதிர்பார்க்கபடுகிறது . தமிழகத்தில் லாட்டரி மீதான தடையை நீக்கினால் தமிழகத்தில் உள்ள பல ஏழைக் குடும்பங்களும் பதிக்கப்படும் . லாட்டரி மீதான தடையை நீக்கினால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழ் மாநாடாக நடக்குமா ? திமுக கட்சித் தொண்டர்களின் ? மாநாடாக நடக்குமா ?


எதிர் வரும் ௨௩- 0௫ -௨0௧0 அன்று கோயம்புத்தூரில் நடக்க இருக்கும் முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு தமிழகம் மட்டும் அல்லது உலகில் உள்ள அணைத்து தமிழர்களும் தமிழன் என்ற ஒரே அடையாளத்துடன் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் . அவ்வாறு இல்லாமல் திமுக தலைவரும் தமிழக முதல்வரும் மு.கருணாநிதி அளிக்கிறார் என்று அனைவரும் கரை வேட்டியுடனும் திமுக கொடியுடனும் வரப்போகிறார்கள். இது போல நடந்தால் அது உண்மையான உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக கருதமுடியாது. எனவே இம்மாநாட்டில் கலந்து கொல்லவரும் அணைத்து தமிழர்களும் சாதி,கட்சி, உயர்ந்தவன் ,தாழ்ந்தவன் என்ற வேருபாடுகளைக்கடந்து தமிழர்களாய் கூடி மாநாடு சிறக்க ஒத்துழைப்பு நல்கவேண்டும் . தமிழக முதல்வர் மு.கருணாநிதி இவ்வாறு அறிவிப்பை செய்து தமிழக மக்களை அழைக்கலாம் .

செவ்வாய், 11 மே, 2010

எங்கும் போலி எதிலும் போலி

எங்கு பார்த்தாலும் போலிச்சாமியார், லஞ்சம், கலப்படம், போலி மருந்து, காலாவதியான உணவுப்பொருள்கள், போலி மதுபானங்கள், உயர் அதிகாhpகளின் சொத்துக்குவிப்புகள் இதுவரை வெளிபட்டவை. இன்னும் என்ன என்ன நடந்து கொண்டுயிருக்கிரதோ! இந்தளவிற்கு நமது நாட்டில் குற்றங்கள் நடப்பது ஏதோ இயல்பானதாகி விட்டது. தவறு செய்பவர்களிடம் பயம் இல்லை. நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தண்டணை கிடைக்க பல ஆண்டுகளாவது அவர்களுக்கு பயம் குறைவதற்கு காரணம். இது போன்ற குற்றமிலைப்பவர்களுக்கு உடனடியாக தண்டணை வழங்க வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை இனி யாரும் செய்ய தயங்குவார்கள். வணிகர்கள் பணம் சம்பாதிக்கும் பொருட்டு எந்த ஒரு துறைசார்ந்தவர்களாக இருந்தாலும் மனசாச்சிக்கு பயந்தவர்களாக தொழில் செய்யவேண்டும்.

திங்கள், 1 பிப்ரவரி, 2010

சொகுசுப் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம்

வணக்கம் தமிழர்களே !
கோவையில் நடை பெற உள்ள உலகத் தமிழ்செம்மொழிமாநாட்டை தமிழக அரசு நடத்த திட்டமிட்டு இருக்கிறது . அதனை ஒட்டி கோவையில் 01-02-2010 அன்று தமிழக துணைமுதல்வர் 150 நகரப்பேருந்துகளையும், 50 புறநகர் பேருந்துகளையும் இயக்கத்துவக்க விழா கோவை சிறைசாலை மைதானத்தில் நடந்தது. 01-02-2010 அன்று முதல் இப்பேருந்துகள் இய்ககப்படன. புதிதாக விடப்பட்டுள்ள பேருந்துகளைப் பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும். அப்பேருந்துகளில் பயணம் செய்த மக்களுக்கு அதிர்ச்சியாகயிருந்தது. இதுவரை குறைந்த படச கட்டணமாக 2 ரூபாய் மட்டுமே கொடுத்து பயணம் செய்த மக்களுக்கு அக்கட்டணம் பண்மடங்காக உயர்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அரசு முன்னறிவிப்பின்றி பழைய பேருந்துகளை எடுத்துவிட்டு அவற்றிகுப் பதிலாக சொகுசுப் பேருந்துகளை இயக்கின. இதற்கு மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் எதிர்ப்பு இருந்ததது . இதனால் புதிய சொகுசு பேருந்துகளை மாணவர்களும் , பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர் . இதனால் 04-0௨-2010 அன்று புதிய பேருந்துகளை நிறுத்திவிட்டு பழைய பேருந்துகளை இயக்கினர் . ஒரு சில நாள்கள் கழித்து மீண்டும் எல்லா சாதாரண பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதோடு சொகுசுப் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதை முன்பாகவே செய்திருந்தாள் அரசுக்கு கொட்ட பெயர் வந்திருக்காது அல்லவா?

சனி, 30 ஜனவரி, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு

வணக்கம் தமிழர்களே!
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நடத்தத்திட்டமிட்டது நல்ல சிந்தனைதான், ஆனால் அதற்காக நியமிக்கப்பட்ட தலைமையில் ஒருவர் க.சிவத்தம்பி தமிழ் இலக்கியவாதி என்பதால் அவரை தலைவர் என இந்த தமிழ் உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் கருணாநிதியின் மகள் என்ற ஒரு அடைமொழியுடன் மட்டுமே உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுத் தலைவி என்பதை உலகத்தமிழர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழுக்காக என்ன புடுங்கியிருக்கா? இது முழுக்க முழுக்க கருணாநிதியின் அரசியல் குணத்தையே உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிலும் காட்டினால் இது ஒரு உண்மையான உலகத்தமிழ் மாநாடாக நடக்காது, தனது அரசியல் கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் கூட்டமாக ஆகிவிடக்கூடாது. இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் கருணாநிதி உண்மையாக தமிழுக்கு தொண்டு செய்து வரும் எத்தனை அறிஞர்கள் இருக்கிறhர்கள் அவர்களை எல்லாம் கூட அறியாதவராக இருக்கிறhர் இன்றைய முதல்வர். இந்த நிலையை மாற்றிக்கொண்டு உண்மையான தமிழறிஞர்களை கண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.