இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 ஜூன், 2014

தனியார் மெட்ரிக் பள்ளிகளின் அண்மைக்கால குற்றச் செயல்பாடுகள்

தனியார் மெட்ரிக் பள்ளிகளின் அண்மைக்கால குற்றச் செயல்பாடுகள்

நான் பள்ளி படிக்கும் நாட்களில் ஏதோ ஒன்று, இரண்டு என்ற எண்ணிக்கையில் இருந்த தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை இன்று புற்றீசல்கள் போல பெருகிவிட்டன. இன்று கிராமங்களில் கூட இம்மாதிரியான பள்ளிகள் துவக்கப்படுகிறன. இப்பள்ளிகள் தொடக்கத்தில் ஆங்கில வழிக்கல்வி என்ற அறிமுகத்துடன் தங்களை பிரகடப்படுத்திக் கொண்டன. 1990 ஆம் ஆண்டு எனது சொந்த ஊர் சிவகாசிக்கு அருகில் உள்ள மணியம்பட்டி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத்துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தேன். அப்போது விளாம்பட்டியில் புதிதாக ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி தொடங்கப்பட்டது. அதனை அறிந்த என் நண்பனின் தந்தை (அவர் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர்) என்னுடன் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நண்பனை அழைத்துக் கொண்டு போய் LKG யில் சேர்த்தார். பின்னாளில் நான் இளங்களை முடிக்கும் நாளில் தான் அவன் தனது பள்ளிப்படிப்பை முடித்தான். ஆனாலும் இந்த அளவிற்கு ஆங்கிலக் கல்வி ஏறக்குறைய முப்பதாண்டுகளாக தமிழ்ச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையானது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழிக் கல்வி சிறுமையைத் தருவதாகவும் ஆங்கில வழிக்கல்வி சிறந்தது போன்ற ஒரு மாயயை தமிழ்ச் சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. அதன் விளைவுகளை தோலுரித்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தனியார் பள்ளிகளின் நோக்கம்
ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகள் ஒரு தொழிற்சாலைகள் போன்றே நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகளின் நோக்கம் பணத்தை பெற்றேhர்களிடமிருந்து பறிப்பதே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான எதையும் பெற்றோர்கள் அவர்கள் விருப்பத்திற்கு வாங்கிக் கொடுக்க முடியாது, பணத்தை மட்டும் கட்டி விட வேண்டும் சீருடை முதற்கொண்டு நோட்டு புத்தகம் என கல்விக்கான உபகரனங்களை கொடுக்கின்றனர். ஏதோ நாங்களே கொடுத்து விடுகிறோம் என்ற சுயவிளம்பரம் வேறு. அதுவும் (10)  பத்தாம் வகுப்பு பள்ளி இறுதி (+2) வகுப்பு படிக்கும் மாணவர்கள் எல்லோரும்; விடுதியில் தான் கண்டிப்பாக தங்கிப்ப படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பள்ளியின் அருகாமையில்  உள்ள ஊர் மாணவர்கள் கூட பள்ளி விடுதியில் தங்கிப் பயில கட்டாயப்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. கல்விக்கட்டணத்துடன் மாதம் மாதம் விடுதிக்கட்டணம் உணவுக்கட்டணம் என பல கட்டணங்களை மாணவர்கள் மீது சுமத்தி பெரிய அளவில் பணத்தை சுருட்டுவதே இப்பள்ளிகளின் நோக்கமாக இருக்கின்றன. 

தனியார் பள்ளிகளின் ஆசிhpயர்களின் நிலை
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகின்றன. அதுவும் வேலை நேரம் அதிகம் என்பதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி முடித்து வரும் இளைய தளைமுறையைச் சேர்ந்தவர்களே நேரம் பாராது உழைக்கும் மனநிலையில் இருப்பதால் அவர்களுக்கு ஆசிரியர் பணியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதுவும் திருமணம் ஆகாத இருபாலாசிரியர்களையே இப்பள்ளியின் விடுதிக்காப்பாளர் வேலையையும் சேர்த்து செய்யச் சொல்கின்றனர். அப்படி திருமணமான ஆசிரியைகள் பள்ளியில் சேரும் போதே இடையில் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது இடையில் செல்லக்கூடாது என்று பல விதிமுறைகளை விதிக்கின்றன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இப்பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு வேலைக்கு செல்ல மாட்டேன் என்று உறுதி மொழியை பத்திரத்தில் கையெழுத்திட்டு பெற்ற பின்பே பணியில் சேர்த்துக் கொள்ளும் பள்ளிகளும் தமிழகத்தில் உள்ளன.

பெற்றோர்கள் கவனத்திற்கு 
ஒவ்வொரு பெற்றோரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விடூ நாம் பள்ளியில் படித்த போது எப்படி படித்தோம். நம் குழந்தையிடம் மட்டும் அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானது. அதற்காக நன்கு படிக்க வேண்டும் என்று விரும்புவது நியாயம் தான் ஆனால் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக விடுதியில் கொண்டு சென்று சேர்ப்பது, பள்ளிப்படிப்புக்கு இலட்சக்கணக்கில் பணத்தை வட்டிக்காவது வாங்கி செலவு செய்து முட்டால் தனம். படிக்கின்ற பிள்ளை எங்கு படித்தாலும் நன்றாகப் படிக்கும் எனவே இந்தப்பள்ளியில் படித்தால் தான் என் பிள்ளை நல்ல நிலைக்கு செல்வான் என்பதில்லை. கல்வியைத் தொண்டாக நினைத்து கல்வி நிறுவணங்களை நடத்தி வருபவர்கள் எத்தனையோபேர் இருக்கிறhர்கள். அப்படிப்பட்ட நல்ல கல்வி நிலையங்களில் தங்;களது செல்லப்பிள்ளைகளை சேர்த்து படிக்க வையுங்கள். கற்றல் சுமையாக இருக்கக் கூடாது சுகமானதாக இருக்க வேண்டும். மதிப்பெண் மட்டும் போதாது அதையும் தாண்டி எத்தனையோ உலகில் இருக்கிறது. படிப்பவர்கள் எல்லோரும் மருத்துவர், பொறியாளர், என்றாகிவிட்டால் மற்ற வேலைகளை யார் செய்யவது. குழந்தையின் ஆர்வத்தை கண்டறிந்து அந்தத் துறை சார்ந்த படிப்பைத் தேர்வு செய்தால் அது அவனது வாழ்க்கை முழுவதும் மன நிறைவுடன் பணியாற்றுவதற்கும், அந்தத் துறையில் சாதனைகள் படைக்கவும் வழி வகுக்கும்.

தேர்வு சதவிகிதமே முக்கிய குறிக்கோள்
தொடக்கத்திலிருந்தே தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சரியாக படிக்காத மாணவர்களை ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க அனுமதிக்கின்றனர். சில மெட்hpக் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களை ஆறாம் வகுப்பில் சேர்ப்பது இல்லை. பின் தங்கிய அரசுப்பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடித்து வரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இல்லை என்றால் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியது தான். சில மெட்ரிக் பள்ளிகளில் (10)  பத்தாம் வகுப்பு பள்ளி இறுதி (+2) வகுப்பு தேர்ச்சி சதவிதத்தில் பின்னர் பதிப்பு ஏற்படக்கூடாது என ஆறாம் வகுப்பிலேயே நன்றாக படிக்காத மாணவர்களை வடிகட்டி விடுகின்றனர். உங்கள் குழந்தை தேர்ச்சி பெறவில்லை மேலும் படிக்க வேண்டும் என்றால் தேர்ச்சி என சான்றிதழ் தருகிறோம் வேறுபள்ளியில் சேர்ந்து படிக்க வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கின்றனர். இன்னும் சில பள்ளிகளில் நன்றhக படிக்காத மாணவர்களை தனித்தேர்வர்களாக பதிவு செய்து தேர்வு எழுதச்செய்யும் நிகழ்வும் நடக்கின்றன. இவை எல்லாம்  நூறு சதவிகித தேர்ச்சி என விளம்பரப்படுத்திக் கொள்ளவும் பள்ளியின் பெயரை மக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவதற்கே இம்மாதிரியான சுழ்ச்சிகளை பல பள்ளிகள் செய்கின்றன. இவற்றை எல்லாம் கண்டும் காணாமலும் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையை போக்க (10)  பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி இறுதி (+2) வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற நிலையை கொண்டு வந்தாலே போதும் எல்லாம் சரியாகிவிடும்.

பொதுத் தேர்வின் பாதிப்புகள்
(10)  பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி இறுதி (+2) வகுப்பு படிக்கும் மாணவர்களை  100 க்கு 100 சதவிகிதம் தேர்ச்சி பெறவைப்பது. மாநில அளவில் முதல் இடம் தமது பள்ளி மாணவர்கள் வந்தால் நமக்கு சிறப்பு என பள்ளி நிர்வாகம் ஆசைப்படுவது. இந்த இரண்டு காரணங்களுக்காகவே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்க அந்தவகுப்பிற்கான பாடத்தை நடத்தாமல் பத்தாம் வகுப்புக்கான பாடத்தை நடத்துகின்றனர். இரண்டாண்டுகள் ஒரே பாடத்தை படித்து எழுதி என பல முறை பயிற்சி அளிக்கின்றனர். எனது பக்கத்து வீட்டு பெண் ஒன்பதாம், வகுப்பு படிக்கின்றாள் அவள் கூறிதான் இப்படி எல்லாம் நடக்கிறதா? என்று மனம் வேதனை அடைந்தோன். இதே நிலை தான் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும். (+2) வகுப்புகளுக்கான பாடத்திட்டம் நடத்தி பயிற்சி அளிக்கின்றனர். இவற்றை கல்வித்துறை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பள்ளிக் கல்வியில் நிலை என்ன ஆகும் என்று தெரியவில்லை.

  அரசுப்பள்ளிகளில் இன்றைய நிலை
கல்விக் கண் திறந்த காமரசர் அவர்களால் பட்டி தொட்டிகள் எங்கும் திறந்து வைக்கப்பட்ட அரசுப்பள்ளிகள் அண்மைக்காலத்தில்; சத்தமில்லாமல் ஈராசிரியர் பள்ளிகாளகவும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாகவும் மாற்றம் பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதை எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை. ஆதாலால் இனி வரும் காலங்களில் அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. அரசுப்பள்ளிகளில் படிக்கமாட்டார்களாம் ஆனால் அரசு வேலை மட்டும் வேண்டும் என்பது என்ன நியாயம். இந்த நிலையை மாற்ற தமிழகத்தில் அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று மாற்றினால் கண்டிப்பாக அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும். இப்படி ஒரு சட்டம் இயற்றினால் மட்டுமே அரசுப்பள்ளிகளை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் அரசுப்பள்ளிகள் காணாமல் போகும் காலம் தொலைவில் இல்லை. கல்வியை பணம் கொட்டும் தொழிலாக மாற்றியுள்ளவர்களிடமிருந்து மீட்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக